சினிமா

மகா சிவராத்திரி விழாவில் ஜக்கி வாசுதேவ் உடன் செம டான்ஸ் போட்ட தமன்னா!

Published

on

இந்த ஆண்டு ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்றிருந்தார்.

ஆண்டு தோறும் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழாவில் சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல பிரபல நடிகைகள் பங்கேற்று வருகின்றனர்.

#image_title

இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் நடிகை தமன்னா கலந்து கொண்டு சிவ வழிபாடு செய்தார்.

நடிகை தமன்னா கோவைக்கு வருகை தந்ததில் இருந்தே அவரது புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், மகா சிவராத்திரி விழாவில் ஜக்கி வாசுதேவ் உடன் இணைந்து கொண்டு நடிகை தமன்னா போட்ட டான்ஸ் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் தமன்னா. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பிசியான நடிகையாக நடித்து வரும் தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

சமீப காலமாக விஜய் வர்மாவுடன் டேட்டிங் சென்று வரும் தமன்னா மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை தரிசனம் செய்த புகைப்படங்களும், ரசிகர்களும் செல்ஃபி எடுத்துக் கொண்ட போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version