சினிமா
லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2 வருது.. காமக் கதையில் தமன்னா, கஜோல், மிருணாள் தாகூர்!
நெட்பிளிக்ஸ் ஓடிடி இந்திய கலாச்சாரத்தையே குழி தோண்டி புதைக்கும் வண்ணம் படு மோசமான வெப்சீரிஸ்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. ராணா நாயுடு வெப்சீரிஸ் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த வெப்சீரிஸின் அடுத்த சீசன் விரைவில் வரும் என்கிற அறிவிப்பை ராணா டகுபதி செம சந்தோஷமாக சொல்லி இருந்தார்.
இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரீஸ் முதல் சீசன் மூலமாகவே பாலிவுட்டை அதிர வைத்த நெட்பிளிக்ஸ் தற்போது 2வது சீசனை இந்த மாத இறுதியில் வெளியிடப் போவதாக அறிவித்து ஆபாச டீசரையும் வெளியிட்டுள்ளனர்.
திருமணத்துக்கு முன்பே டெஸ்ட் டிரைவ் செய்வது அவசியம் என பாட்டி நடிகை சொல்வது போல ஆரம்பிக்கும் அந்த டீசரில் இளைஞருடன் கஜோல் காதல் கொள்வது போன்ற காட்சிகளும், ரூமர் காதலரான பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவுடன் நடிகை தமன்னா படுக்கையில் கட்டிப் புரண்டு முத்த மழை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
போதாக் குறைக்கு துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தில் செம ஹோம்லியாக நடித்த மிருணாள் தாகூர் இந்த வெப்சீரீஸில் மிரட்ட காத்திருக்கிறார். தனுஷின் ஷமிதாப் படத்தை இயக்கிய பால்கி உள்ளிட்ட பாலிவுட்டின் 4 பிரபல இயக்குநர்கள் இயக்கி உள்ள 4 கதைகள் நெட்பிளிக்ஸில் வரும் ஜூன் 29ம் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
நடிகை தமன்னாவின் படு செக்ஸியான காட்சிகளை பார்க்கவே மாதம் 199 ரூபாய் சந்தாவில் ஒளிபரப்பாகி வரும் நெட்ப்ளிக்ஸை ரசிகர்கள் சப்ஸ்கிரைப் செய்ய இந்த மாதம் ரெடியாக உள்ளனர்.
[youtube https://www.youtube.com/watch?v=4aanxonXWiM]