சினிமா செய்திகள்
விஷாலுக்கு மீண்டும் ஜோடியான தமன்னா!
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சி விஷால் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில், கத்திச்சண்டைக்கு பிறகு விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், கத்திச்சண்டை படத்தில் வில்லனாக நடித்த ஜெகபதிபாபு மீண்டும் இந்த படத்திலும் வில்லனாக களமிறங்குகிறார்.
பொங்கலுக்கு வெளியான அஜித்தின் விஸ்வாசம் படத்தில் ஜெகபதிபாபு வில்லனாக மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அயோக்யா படத்தை முடித்த பிறகு விஷால் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள ஆக்ஷன் காமெடி எண்டர்டெயினர் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.