இந்தியா

இந்தியாவின் மிக உயர்ந்த சிவன் சிலை… திருவனந்தபுரத்தில் அலைமோதும் பக்தர்கள்!

Published

on

இந்தியாவின் மிகவும் உயரமான சிவன் சிலை கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மிக உயர்ந்த இந்த சிவன் சிலை கடந்த வியாழக்கிழமை முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞம் பகுதியில் உள்ள ஆழிமலா சிவன் கோயிலில் இந்த உயர்ந்த சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கங்காதர சிவ ரூபத்தில் உள்ள இந்த சிவன் சிலையை செதுக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2020-ம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. கடலில் இருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ள பாறையின் மேல் 58 அடி உயரத்துக்கு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. தலையில் கங்கை உடன் பெரிய சூலம், உடுக்கையைக் கையில் கொண்டு அமர்ந்த நிலையில் சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version