உலகம்

காந்தாகரை அடுத்து காபூல்… மளமளவென ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றும் தாலிபான்கள்!

Published

on

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து பல நகரங்களைக் கைப்பற்றி வரும் சூழலில் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்ற குறி வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமர்த்தப்பட்டு இருந்த அமெரிக்க ராணுவப் படையினர் தற்போது அமெரிக்க அதிபரின் உத்தரவால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு காலி செய்யத் தொடங்கியது முதலே தாலிபான்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். முக்கிய அரசு இடங்களில் குண்டு வெடிப்பு அதைத் தொடர்ந்த பலிகள் என தாலிபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஏற்கெனவே இரண்டு முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய தாலிபான்கள் தற்போது காந்தகாரையும் முழுவதுமாகக் கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக தலைநகர் காபூலை குறிவைத்து தாலிபான்கள் படை நகர்ந்து வருகிறதாம். இன்னும் 3 மாத காலக் கட்டத்துக்குள் ஆப்கானிஸ்தான் நாடு முழுவதுமே தாலிபான்கள் கைக்குள் வந்துவிடும் என அமெரிக்க ராணுவத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version