உலகம்

ஆப்கனுக்கு இந்தியா வழங்கிய ராணுவ ஹெலிகாப்டரை கைப்பற்றிய தலிபான்கள்!

Published

on

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய ராணுவ ஹெலிகாப்டரை தாலிபான்கள் தற்போது கைப்பற்றி அதனுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்தும் வெளியிட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமர்த்தப்பட்டு இருந்த அமெரிக்க ராணுவப் படையினர் தற்போது அமெரிக்க அதிபரின் உத்தரவால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு காலி செய்யத் தொடங்கியது முதலே தாலிபான்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். முக்கிய அரசு இடங்களில் குண்டு வெடிப்பு அதைத் தொடர்ந்த பலிகள் என தாலிபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த சூழலில் முக்கிய நகரங்களின் போலிஸ் தலைமைச் செயல்கங்கள் எல்லாம் தாலிபான்கள் வசம் வந்துள்ளன. மேலும், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய Mi-24 அட்டாக் டெலிகாப்டரையும் அவர்கள் கைப்பற்றியுள்ளதாகப் புகைப்படம் வெளியாகி உள்ளது. கண்டூஸ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ ஹெலிகாப்டரை சுற்றி தற்போது தாலிபான்கள் நிற்பதுபோன்ற புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
author avatar
seithichurul

Trending

Exit mobile version