இந்தியா

இந்தியாவுடன் நல்லுறவை எதிர்பார்க்கும் தலிபான்கள்.. இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

Published

on

இந்தியாவுடன் நல்லுறவை எதிர்பார்ப்பதாகத் திங்கட்கிழமை தலிபான்கள் கூறியுள்ளது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலாக இருக்காது என கூறினார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் பிடித்த பிறகு என்னதான் உலகின் பல்வேறு நாடுகளும் அவர்களுக்கு எதிராக இருந்தாலும், நாங்கள் அனைவருடனும் நட்புறவுடன் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்கவே முயல்கிறோம் என்று கூறி வருகின்றனர்.

இந்தியாவுடன் தலிபானுக்கு முந்தைய ஆப்கானிஸ்தான் அரசுடன் நல்லுறவுடன் இருந்து வந்தது. ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவற்றைக் இந்தியா கட்டிக்கொடுத்துள்ளது. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அங்கு முதலீடு செய்துள்ளது. எனவே தலிபான்களுக்கு பிறகு இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் உறவு மற்றும் முதலீடுகள் என்ன ஆகும் என்பது கேள்வுக்குறியாக இருந்தது.

தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்குவதால், இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “தலிபான்களால் எந்த நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. இந்தியாவுக்கு நாங்கள் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம். பிற உலக நாடுகளின் தூதரகங்களை ஆப்கானிஸ்தானில் அமைக்கக் கோரிக்கை வைக்கிறோம். இது ஆப்கானிஸ்தானுக்கு நன்மை பயக்கும். எல்லா நாடுகளுடனும் நல்லுறவுடன் இருப்பதையே தலிபான் விரும்புகிறது” என ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார்.

கடந்த காலங்களைப் போல இந்தியாவுடனான கலாச்சார, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைத் தொடர விரும்புகிறோம் என தலிபான் மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் கூறியுள்ளார்.

மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டைகளுக்கு இடையில் ஆப்கானிஸ்தான் நுழையாது. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை நாங்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து செயல்பட அனுமதிக்கமாட்டோம்.

இந்தியா, பாகிஸ்தான் இடையில் நீண்ட கால எல்லை, அரசியல் பிரச்சனை உள்ளது. அவர்கள் இதற்காக எங்களைப் பயன்படுத்தக் கூடாது என நாங்கள் நம்புகிறோம்.

ஆப்கானிஸ்தானில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள இந்தியா சாலை, அணை, நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட கட்டுமான திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. இன்னும் முடிக்கப்படாத திட்டங்களை இந்தியா முடித்துக்கொடுக்க வேண்டும். இந்தியாவுடனான வர்த்தக உறவு மிகவும் முக்கியம். விமான பயணத்துக்குத் தொடர்ந்து தொடர்ந்து ஆப்கான் வான் பரப்பு திறந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் “மாறிவரும் சமன்பாடு” காரணமாக அதன் மீதான மூலோபாயங்களை மறுபரிசீலனை செய்ய இந்தியா நிர்பந்திக்கப்படுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version