உலகம்

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது அமெரிக்க ராணுவம்.. கொண்டாட்டத்தில் தலிபான்கள்!

Published

on

ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வெளியேறியது அமெரிக்க ராணுவம் என பெண்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு 11-ம் தேதி நடைபெற்ற விமானத் தாக்குதலை அடுத்து, ஆப்கானிஸ்தானிற்கு அமெரிக்க ராணுவம் வந்தது. 20 ஆண்டுகளில் ஒசாமா பின் லேடன் உள்ளிட பல்வேறு தீவிரவாத அமைப்பின் தலைவர்களைக் கொன்று குவித்தது அமெரிக்க ராணுவம்.

தலிபான் வாசம் இருந்த ஆப்கானிஸ்தான் மீட்கப்பட்டு இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறுகிறோம் என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 31-ம் தேதி அதிகாலை நேரத்தில் கடைசி விமானத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியது. இதைத் துப்பாக்கியால் சுட்டும், பட்டாசுகள் வெடித்தும் தலிபான்கள் கொண்டாடி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version