சினிமா செய்திகள்

பிக்பாஸ் வின்னரை இயக்கும் ’தல’ அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர்!

Published

on

’தல’ அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான சரண், மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்த சரண், தற்போது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக பிக்பாஸ் முதல் சீசனில் வின்னரான ஆரவ் நடிக்கிறார். ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ராஜபீமா படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஆரவ் அடுத்தபடியாக சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், நாளை மே 1 முதல் எங்கள் வரலாறு பிறக்கிறது என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Trending

Exit mobile version