சினிமா செய்திகள்

இவர்கள் சொன்னதை வச்சு தான் ‘ஜானி’ படத்தை எடுத்து இருக்கிறோம்: பிரசாந்த்

Published

on

ஜானி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பிரசாந்த் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் பலர் திரைப்படங்களுக்கு விமர்சன அளிக்கும் போது தேவைப்பட்டால் தான் பாடல் இருக்க வேண்டும், நகைச்சுவை இருக்க வேண்டும், திரைக்கதை சரியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அவர்கள் கூறிய கருத்துக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஒரு நல்ல படத்தினை நாங்கள் எடுத்து இருக்கிறோம் என்று நம்புகிறோம் என்றார். மேலும் தன்னுடன் நடித்துள்ள பிரபு, ஆனந்த் ராஜ், ஆத்மா, சஜ்சித்தா ஷெட்டி, தேவதர்ஷினி, சந்தியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் அவர்களது பணிகளைச் சரியாகச் செய்துள்ளனர்.

வெற்றி செல்வன் என்ற புதிய இயக்குநரை ஸ்டார் மூவிஸ் கீழ் அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றும் படத்தில் பாடல் ஏதும் இல்லை என்றும் ஆனால் தன்னுடைய அடுத்தப் படங்களில் பாடல்கள் இருக்கும் என்றும் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version