இந்தியா

மேகலாயாவில் தமிழக இளம் டென்னிஸ் வீரர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Published

on

மேகாலயா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீரர் விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன். 18 வயதான இவர் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

அவர் சென்ற கார் திடீரென எதிரே வந்த லாரியுடன் மோதியதையடுத்து சம்பவ இடத்திலேயே தீனதயாளன் மற்றும் அந்த காரின் டிரைவர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீனதயாளன் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவருடைய உடலை சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தனர். விமானம் மூலம் இன்று காலை தீனதயாளன் உடல் சென்னைக்கு வரவழைக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள தீனதயாளன், வரும் 27ம் தேதி ஆஸ்திரியாவின் தொடங்க இருந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தீனதயாளன் மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளதோடு அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version