சினிமா செய்திகள்

அனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி!

Published

on

பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகருமான அனுராக் கஷ்யப் மீது, நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாலியல் குற்றச்சாட்டு குறித்து டிவிட்டரில் தெரிவித்த பாயல் கோஷ், “அனுராக் கஷ்யப் என்னுடன் மிகவும் தவறாக நடந்துகொண்டார். இந்த கலைஞன் பின்னால் உள்ள அரக்கத்தனத்தை நாட்டுக்கு வெளிக்காட்டி பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு தெரியும் இது எனது பாதுகாப்பைப் பாதிக்கும். எனக்கு உதவுங்கள்” என்று தெரிவித்து இருந்தார்.

பாயல் கோஷின் குற்றச்சாட்டுக்கு, “அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு” என்று கஷ்யப் டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

அனுராக் கஷ்யப்புக்கு ஆதரவு தெரிவித்த டாப்ஸி, நீங்கள் ஒரு பெண்ணியவாதி என்று எனக்கு தெரியும் என்றும் அவருடன் தான் சேர்ந்து படத்தில் பணியாற்றிய புகைப்படத்தையும்” இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version