தமிழ்நாடு

டி-23 புலி இருக்குமிடம் கண்டுபிடிப்பு: விரையும் வனத்துறை அதிகாரிகள்!

Published

on

டி-23 என்ற ஆட்கொல்லி புலி இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த இடத்தை நோக்கி வனத்துறையினர் விரைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கூடலூர் அருகே உள்ள மசினகுடி என்ற பகுதியில் ஆட்கொல்லி புலி ஒன்று மனிதர்கள் மற்றும் விலங்குகளை கொன்று தீர்த்து வருகிறது. இதுவரை இந்த புலிக்கு 4 மனிதர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறையாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மசினகுடி, சிங்கார ஆகிய வனப்பகுதிகளில் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிப்பிபாறை நாய் மற்றும் கும்கி யானை உதவியுடன் தேடப்பட்டு வந்த புலி கடந்த 10 நாட்களாக அகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மயக்க ஊசி போட்டு பிடிக்கவோ அல்லது சுட்டுக் கொன்றோ அந்தப் புலியை பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து ட்ரோன் கேமரா உதவியுடன் வனப்பகுதிக்குள் ஆட்கொல்லி புலி இருக்கும் இடம் குறித்து தேடி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ட்ரோன் கேமரா உதவியுடன் வனப்பகுதிக்குள் ஆட்கொல்லி புலி இருக்குமிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அந்த பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று இரவு அல்லது நாளைக்குள் ஆட்கொல்லி புலி பிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version