கிரிக்கெட்

உலகக்கோப்பை டி20: இந்திய அணியின் ஜெர்ஸி புகைப்படம் வைரல்!

Published

on

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வரும் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் இந்தியாவுக்கு முதல் போட்டியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இந்த தொடரின் இறுதி போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து அணி வீரர்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கான புதிய ஜெர்சி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜெர்சியை அணிந்த விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும், இந்த ஜெர்ஸி டார்க் நீலக்கலரில் அட்டகாசமாக உள்ளது என்பதும், இந்த ஜெஸ்ஸி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version