சினிமா செய்திகள்

வாரிசு ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. என்ன விலை தெரியுமா?

Published

on

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் ஆடியோ உரிமையை பிரபல பாடல் நிறுவனம் வாங்கியுள்ளது.

நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பயிடிப்பள்ளி இயக்கி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

வாரிசு படத்தின் இசை அமைப்பாளர் தமனும் விரையில் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகும் என தெரிவித்து இருந்தார். ஆனால் தீபாவளியின் போது வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ போஸ்டர் மட்டுமே ரிலீஸ் ஆனது.

பின்னர் வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி, விகடனுக்கு அளித்த பேட்டியில் வாரிசு படம் ஒரு குடும்ப கதை மட்டுமல்ல. அது எல்லா ரசிகர்களும் விரும்பி பார்க்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

மேலும் இப்போது வாரிசு படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் விதமாக ஆடியோ உரிமையை வாங்கியதற்கான அறிவிப்பும் சனிக்கிழமை வெளியாகியுள்ளது. விஜய்யும் ஒரு பாடலை பாடியுள்ளார்.

ஆடியோ உரிமை இப்போது தான் விற்பனையாகி உள்ளதால், விரைவில் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாத இறுதியில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் காட்சி உருவாக்கத்தில் மிகவும் பெர்ஃபக்ட்டாக இருக்க வேண்டும் என வம்சி விரும்புவதால் சில காட்சிகள் பல டேக்குகள் போவதாகவும், அதுவே படப்பிடிப்பு தாமதம் அடைய முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

படப்பிடிப்பு முடிந்த பிறகு போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முடிந்த பாடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும். கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டின் போது படத்தின் ட்ரெயலர் ரிலீஸ் ஆகும்.

வீரம், ஜில்லா படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய், அஜித் இருவர் நடிப்பில் வாரிசு, துணிவு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. இருந்தாலும் ஏதேனும் ஒரு படம் ஒரு நாள் முன்பு ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.

வாரிசு படம் என்று ரிலீஸ் ஆகிறதோ, அதே நாளில் தான் துணிவு படமும் ரிலீஸ் ஆகும் என படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள ரெட் ஜெயின்ட் மூவிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. எது எப்படியோ வரும் பொங்கல் தல தளபதி பொங்கலாக ரசிகர்களை சந்தோஷப்படுத்த உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version