சினிமா செய்திகள்

விதிமீறிய டி.ராஜேந்தர்… சங்கத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா!

Published

on

பன்முக தமிழ் சினிமா கலைஞர் என்றே அழைக்கப்படும் டி ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் தான் வகித்து வந்த தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்த தமிழக சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் டி ராஜேந்தர் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதனால், தனது ஆதரவாளர்களுடன் தனியாக இன்னொரு தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடங்கி அதில் தனக்குத்தானே தலைவர் பதவியை போட்டுக்கொண்டார்.

ஆனால், ஏற்கெனவே சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் டி ராஜேந்தர் பதவி வகித்து வருகிறார். சங்க விதிகளின் படி ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும். இதன் காரணமாக தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக டி ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version