சினிமா செய்திகள்

‘என்னைப் பழிவாங்க ஈஸ்வரனுக்குத் தடையா?’- கொதிக்கும் டி.ராஜேந்தர்

Published

on

பொங்கலுக்கு ஈஸ்வரன் படத்தை வெளியிட விடாமல் செய்துள்ளது என் மீதுள்ள கோபத்தாலே என டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

‘என்னைப் பழி வாங்கும் பொறுட்டு சிம்புவின் ஈஸ்வரன் படத்தை முடக்க சதி நடக்கிறத்கு’ என நடிகரும் சிம்புவின்  தந்தையுமான டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் வருகிற ஜனவரி மாதம் 14-ம் தேதி வெளியாக இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் வெளிநாடுகளில் ஓடிடி தளங்களில் ஈஸ்வரன் படத்தை வெளியிட தயாரிப்புக் குழுவினர் முடிவு செய்தனர்.

இதற்கு திரை அரங்க சங்கத்தினர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து தற்காலிகமாக ஓடிடி தளங்களில் படத்தை வெளியிடுவதை தயாரிப்புத் தரப்பினர் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த சூழலில் மாஸ்டர் படத்துக்கு அதிகப்படியான திரை அரங்குகள் வழங்கப்பட்டு ஈஸ்வரன் படத்துக்குக் குறைவான திரை அரங்குகளே தரப்பட்டன. அதன் பின்னர் திரை அரங்குகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர் ஈஸ்வரன் படத்துக்கான வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது ஈஸ்வரன் வெளியாகாமல் போனதற்குக் காரணம் என டி ராஜேந்தர் கூறுகையில், “நான் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தலில் போட்டியிட்டேன். அதில் சிலருக்குக் கடுப்பு ஏற்பட்டுள்ளது. என்னைப் பழிவாங்க ஒரு மாஃபியா கும்பலே ஈடுபட்டு வருகிறது. இந்த மாஃபியா கும்பலால் மட்டுமே ஈஸ்வரன் படத்துக்கான வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்தை முடக்குவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் அந்த கும்பல் மேற்கொண்டு வருகிறது” என்றுள்ளார்.

Trending

Exit mobile version