தமிழ்நாடு

1 முதல் 12ஆம் வகுப்பு வரை எத்தனை சதவிகித பாடத்திட்டம் குறைப்பு? முழு தகவல்கள்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இதனை அடுத்து ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் இந்த கல்வி ஆண்டில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2021-22 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மற்றும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட சதவீதம் குறித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 50 முதல் 54 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரை 60 முதல் 65 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்படும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் முழு பாடத்தையும் மாணவர்களுக்கு நடத்த முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கல்வி ஆண்டில் எத்தனை நாட்கள் பள்ளிகள் இயங்கும்? எத்தனை பீரியட்கள் இயங்கும் என்பது குறித்த அறிவிப்பையும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது, இந்த அரசாணை குறித்த முழு விபரங்கள் இதோ:

Trending

Exit mobile version