தமிழ்நாடு

இந்த ஆண்டு பொதுத்தேர்வில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை வருடத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் வகுப்பு மட்டுமே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் அந்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குழு மூலம் நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2021-22 கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் நடக்குமா? அப்படியே நடந்தாலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனதில் இருந்தது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் யார் அன்பில் மகேஷ் அவர்கள் இது குறித்து கூறியுள்ளார்.

பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்படும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் பொதுத் தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு பொதுத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அதேபோல் தமிழக தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இரண்டு பிரிவாக நடத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version