வணிகம்

எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்யும் உலகின் முதல் நாடு!

Published

on

உலக நாடுகள் அனைத்தும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்து வரும் நிலையில், சுவிட்சர்லார்ந்தில் விரைவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சுவிட்சர்லாந்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு விதிக்க உள்ள தடை நிரந்தரமானது அல்ல. குளிர்காலத்தில் மட்டும் தான் தடை செய்யப்படும் என கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் உள்நாட்டு மின்சார உற்பத்தி 25 சதவீதம் மட்டுமே. மீதம் உள்ள 75 சதவீத மின்சாரத் தேவை, கச்சா எண்ணெய், பெட்ரோல் பொருட்கள், எரிவாயு மற்றும் நிலக்கரி மூலம் மட்டுமே ஈடு செய்யப்படுகிறது.

குளிர்காலம் என்ற சுவிட்சர்லாந்தில் மின்சார பற்றாக்குறை மிக அதிக அளவில் இருக்கும். எனவே சுவிட்சர்லாந்து அரசு, குளிர்காலத்தில் ஏற்படும் மின்சாரப் பற்றாக்குறையைச் சரி செய்ய நான்கு படிகளில் மின்சார பயன்பாட்டைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

அதில் மூன்றாவது படியே மின்சார வாகன பயன்பாடு தடையாகும். இது முழுமையான தடை அல்ல. குளிர்காலத்திற்கு மட்டும்தான் என கூறப்படுகிறது. மின்சார வாகன தடை வந்தால், மருத்துவமனை செல்வது, நீதிமன்றம் செல்வது போன்ற முக்கிய பணிகளுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்த முடியும்.

மேலும் குளிர்காலத்தில் வீடுகளை 20 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாகச் சூடேற்றாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். சலவை இயந்திரங்கள் 40 சதவீத டிகிரி செல்சியைஸ் வெப்பம் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த படிகளை எல்லாம் பின்பற்றியும் சுவிட்சர்லார்ந்து மின்சார பற்றாக்குறை ஏற்பட்டால், கடைகள் எல்லாம் தினமும் 2 மணி நேரம் மூட உத்தரவிடப்படும். விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்றவற்றிற்குத் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version