தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் பரவும் பன்றிக்காய்ச்சல்: எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

Published

on

தமிழகத்தில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து இது மேலும் பரவும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் பரவியது போல இந்த ஆண்டும் பன்றிக்காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் 13-ஆம் தேதி வரை 48 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பொது சுகாதார இயக்குநர், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இதன் காரணமாக பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் கடுப்பாட்டில் உள்ளது. தினமும் 1 அல்லது 2 பேர் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இருந்தாலும் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றார்.

seithichurul

Trending

Exit mobile version