பல்சுவை

மாற்றுத்திறனாளியை நீச்சல் வீரராக மாற்றிய தாய்.. புத்தகம் வெளியீடு!

Published

on

முதல் முறையாகப் பல சவால்களை எதிர்கொண்ட மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் ஸ்ரீ ராமின் தாய் பற்றி புத்தகம் வெளியிடப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் பல சவால்களை எதிர்கொண்டு சாதித்த, நீச்சல் வீரர் ஸ்ரீ ராமின் தாய் பற்றி புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு பாண்டிச்சேரி to கடலூர் செல்லும் வழியில் சுமார் 5 கிலோ மீட்டர் வரை தனது கைகளை மட்டும் பயன்படுத்தி நீச்சல் அடித்து சாதனை படைத்தவர் ஸ்ரீ ராம். அதற்காகத் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு ஸ்ரீ ராமிற்கு விருது வழங்கி கவுரவித்துள்ளார். மேலும், இவர் கின்னஸ் சாதனை படைத்த ஷோபனா திமான் அவர்கள் நடத்திய 10 மேற்பட்ட பேஷன் ஷோக்களி்ல் கலந்துகொண்டுள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமின் அம்மா வனிதா பற்றி புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த பதக்கத்தை மருத்துவர் அர்ணேஷ் கார்க் எழுதியுள்ளார்.

வண்டலூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் வள்ளலார் ஐ.ஏ.எஸ் வெளியிட மகேஷ் அகர்வால் ஐபிஎஸ் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய ஸ்ரீ ராமின் தாயாரான வனிதா, எனது மகனை இந்த சமுதாயத்தில் வளர்ப்பதற்குப் பல சவால்களை எதிர்கொண்டேன், தற்போது அவன் செய்யும் சாதனைகள், நான் ஆரம்பக் காலத்தில் பட்ட வேதனைகள், கஷ்டங்களுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது, தன்னை பற்றிய புத்தகம் வெளியாகி இருப்பது பெருமையாக இருக்கிறது.

 

இதை நான் கனவில் நினைத்துப் பார்க்கவில்லை, இனி மாற்றத்திறனாளி குழந்தைகளைத் தெய்வத்தின் குழந்தைகள் என்று நினைத்து அவர்களுக்கு எந்தொரு துன்பத்தையும் கொடுக்காமல் சக மனிதர்களாக அம்மாக்கள் வளர்க்க வேண்டும் என்றார்.

Trending

Exit mobile version