பல்சுவை

இந்திய மக்களின் விருப்ப உணவு எது தெரியுமா? ஸ்விகி வெளியிட்ட சீக்ரெட்..!

Published

on

இந்தியர்கள் இந்த ஆண்டு முழுவதும் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு விவரங்களை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

லாக்டவுன் காலம் முழுமையாக நிறைவு பெறாவிட்டாலும் இந்தியார்கள் அதிகப்படியாகவே இந்த ஆண்டு ஆன்லைன் உணவு டெலிவரி செய்து சாப்பிட்டுள்ளனர். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி தளத்தின் மூலம் இந்தியர்களின் உணவு விருப்பம் வெளிப்பட்டுள்ளது.

ஸ்விகி மூலம் அதிகம் ஆர்டர் ஆன உணவு சிக்கன் பிரியாணியாம். ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்படும் அதே வேளையில் 6 சிக்கன் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகிறதாம். ஒவ்வொரு விநாடிக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட உணவுகள் ஆர்டர் செய்யப்படுகின்றனவாம்.

சிக்கன் பிரியாணிக்கு அடுத்து மசால் தோசை, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் ப்ரைடு ரைஸ் ஆகிய உணவுகள் அடுத்தடுத்து அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வரிசையில் உள்ளன. லாக்டவுன் காலம் என்பதால் அலுவலக முகவரியைவிட வீட்டு முகவரிகளிலேயே அதிக ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்விகி-க்குப் புதிதாக 5 லட்சம் வாடிக்கையாளர்கள் கிடைத்து உள்ளார்களாம்.

Trending

Exit mobile version