இந்தியா

ட்ரோன்கள் மூலம் டெலிவரி: சென்னை நிறுவனத்துடன் ஸ்விக்கி ஒப்பந்தம்!

Published

on

பத்தே நிமிடங்களில் டெலிவரி என ஸ்விக்கி நிறுவனம் விளம்பரம் செய்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக ட்ரோன்கள் மூலம் ஆர்டர் செய்தவர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது .

இதன் முதல் கட்டமாக அகில இந்திய அளவில் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்துடன் ஸ்விக்கி நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது .

இந்த நிறுவனத்தின் மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருள்கள் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யப்படும் என்றும் முதல் கட்டமாக டெல்லி மற்றும் பெங்களூருவில் சோதனை முயற்சியாக இந்த டெலிவரி ட்ரோன்கள் மூலம் செய்யப்படும் என்றும் இதிலிருந்து கிடைக்கும் பாடங்களை அடிப்படையாக கொண்டு சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது .

ஆனால் அதே நேரத்தில் தற்போதைக்கு வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ட்ரொன்கள் டெலிவரி செய்யாது என்றும் டெலிவரி செய்தவரின் இடம் அருகே உள்ள ஒரு பொதுவான இடத்தில் ஆர்டர் மூலம் பெற்ற பொருட்கள் கொண்டுசெல்லப்படும் என்றும் அந்த பகுதிக்கு ஆர்டர் செய்தவர் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இதில் உள்ள குறை நிறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு விரைவில் ஆர்டர் செய்தவரின் வீட்டுக்கே ட்ரோன்கள் மூலம் வெளிநாட்டில் டெலிவரி செய்யப்படுவது போன்று இந்தியாவிலும் டெலிவரி செய்யப்படும் என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version