தமிழ்நாடு

அப்படியே இதையும் சொல்லுங்களேன்: திமுக எம்பிக்கு எஸ்.வி.சேகர் கோரிக்கை!

Published

on

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கற்பிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்பி கூறியுள்ள நிலையில் அப்படியே இதையும் சொல்லுங்கள் என நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கற்பிக்க உத்தரவிட வேண்டும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று திமுக எம்பி திருச்சி சிவா அவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கற்பிக்க உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக எம்பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை குறித்து நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இதை தீர்மானிக்க வேண்டியவர் அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களே. அப்படியே மிக குறைந்த கல்விக்கட்டணத்தில் சிறப்பான கல்வியை கொடுக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்திற்கு கொண்டுவருவோம் என சொல்லுங்களேன் MP.

எஸ்வி சேகரின் இந்த டுவீட்டுக்கு ஏராளமான நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்து வந்தாலும், ஒரு சில நெட்டிசன்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version