தமிழ்நாடு

புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு

Published

on

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்டுவந்த சுனில் அரோரா அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுசில் சந்திரா என்பவரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் முடிவடைந்த நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்றுடன் தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக யார் நியமன செய்யப்படுவார் என்ற பரபரப்பு இருந்தது.

இந்த நிலையில் சற்று முன் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் சந்திரா என்பவரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். சுசில் சந்திரா அவர்கள் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நாளை பொறுப்பு ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் சுசில் சந்திரா அவர்கள் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி வரை பதவியில் இருப்பார். இந்த காலகட்டத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version