சினிமா செய்திகள்

சுசி கணேசனின் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு: பாடகி சின்மயிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published

on

சென்னை ஐகோர்ட்டில் இயக்குனர் சுசி கணேசன் தாக்கல் செய்த ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழக்கில் நீதிமன்றம் பாடகி சின்மயிக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் சுசிகணேசன் இயக்கும் திரைப்படத்தில் இளையராஜா இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை அடுத்து பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இயக்குனர் சுசி கணேசனின் படத்திற்கு இளையராஜா இசை அமைப்பதா? என்று பதிவு செய்தனர்.

அதேபோல் கவிஞர் லீலா மணிமேகலை என்பவர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில் இதுகுறித்து அவதூறு வழக்கு ஏற்கனவே சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சுசிகணேசன் இணைவது குறித்த சர்ச்சைக்குரிய சின்மயி மற்றும் லீலா மணிமேகலையின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கோடியே 10 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என இயக்குனர் சுசி கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது லீனா மணிமேகலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஏற்கனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோர் செயல்படுவதாகவும் சுசி கணேசனின் வழக்கறிஞர் வாதாடினார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணையவுள்ள நிலையில் தன்னுடைய பெயரை கெடுக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தொடர்ச்சியாக இருவரும் பரப்பி வருவதாகவும் வாதாடப்பட்டது.

இதனையடுத்து மனுதாரர் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறிய நீதிபதி, ‘சுசிகணேசனுக்கு எதிராக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சின்மயி மற்றும் லீனா மணிமேகலை வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும் இந்த வழக்கு குறித்து லீனா மணிமேகலை, சின்மயி, கூகுள், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version