இந்தியா

அனைத்து ஏ.டி.எம்களையும் இன்று முதல் மூட முடிவு செய்த வங்கி: வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

Published

on

அனைத்து ஏடிஎம்களையும் இன்று முதல் மூட முடிவு செய்திருப்பதாக வங்கி ஒன்று தெரிவித்துள்ளதை அடுத்து வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகம், மகாராஷ்டிரா, ஒரிசா உள்பட 13 மாநிலங்களில் செயல்பட்டுவரும் வாங்கி சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் நாடு முழுவதும் பல இடங்களில் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முதல் அதாவது அக்டோபர் 1 முதல் இந்த வங்கியின் அனைத்து ஏற்பாடுகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் மேலாண்மை இயக்குனர் கூறியபோது ’எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் எங்கள் வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்துங்கள் இல்லை என்பதை அறிந்துகொண்டோம். எங்களது வாடிக்கையாளர்கள் பல்வேறு ஏடிஎம்களில் பணம் எடுத்து வருகின்றனர். எனவே எங்கள் வங்கியின் ஏடிஎம்களை மூட முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் எங்கள் வங்கியின் ஏடிஎம் மூடப்பட்டாலும் வாடிக்கையாளர்கள் வங்கி ஏடிஎம்களில் இலவசமாக எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அதில் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஏடிஎம்கள் மூடப்பட்டாலும் வாடிக்கையாளர்களின் மற்ற சேவைகளான ஆன்லைன் பாங்கிங், மொபைல் பாங்கிங் போன்ற வசதிகள் வழக்கம்போல் தொடரும் என்றும் ஆன்லைன் பரிவர்த்தனை உள்பட அனைத்து சேவைகளிலும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றும் சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version