சினிமா செய்திகள்

சூர்யாவின் அடுத்த மூன்று படங்கள் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு!

Published

on

சிங்கம் 3 படத்தை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே என கடந்த 2 ஆண்டுகளாக சூர்யா படங்கள் தொடர்ந்து படு தோல்வியை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், அடுத்த மாதம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகும் காப்பான் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் நடிகர் சூர்யா.

ஏற்கனவே அயன், மாற்றான் என நல்ல படங்களை தனக்கு கொடுத்த கே.வி. ஆனந்த் இந்த முறையும் ஒரு பிளாக்பஸ்டர் கொடுப்பார் என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், சூர்யா நடிப்பில் அடுத்து ரிலீசாகவுள்ள இரண்டு படங்களில் ரிலீஸ் தேதியும் கசிந்துள்ளன.

இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூரரை போற்று படம் ரிலீசாகவுள்ளதாம்.

மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா கமீட் ஆகியுள்ள புதிய படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என தகவல் கிடைத்துள்ளது.

இந்த செய்தி அறிந்த சூர்யா ரசிகர்கள் அடுத்து மூன்று பிளாக் பஸ்டர்கள் வெயிட்டிங் என்ற உற்சாகத்தில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version