சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு சூர்யாவின் புத்தாண்டு பரிசு!

Published

on

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா37 படத்தின் தலைப்பை புத்தாண்டு பரிசாக ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாய்ஷா நடித்துள்ள சூர்யா 37 படத்திற்கு காப்பான் என படக்குழு பெயரிட்டுள்ளது. இதனை நள்ளிரவு 12.05 மணிக்கு கே.வி. ஆனந்த் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிவித்தார்.

முன்னதாக மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகள் கொடுத்து அதற்கு வாக்களிக்க ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தார் கே.வி. ஆனந்த், அயன், மாற்றான், என ‘ன்’ என்ற சொல்லில் தலைப்பு வைப்பதில் கே.வி. ஆனந்த் பிரபலம் என்பதால் பலரும் காப்பான் என்ற தலைப்பை தேர்வு செய்தனர். ஆனால், அதைவிட உயிர்கா என்ற புதிய டைட்டிலுக்குத் தான் அதிபட்சமான வாக்குகள் பதிவாகின.

ஆனால், இறுதியாக காப்பான் என்ற டைட்டிலையே படக்குழு தேர்வு செய்து அறிவித்தது.

இந்த படத்தில் சூர்யா பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார். பிரதமர் கதாபாத்திரத்தில் மோகன் லால் நடித்துள்ளார். படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version