சினிமா செய்திகள்

விஸ்வாசம் இயக்குநர் சிவாவுடன் சூர்யா கூட்டணி?

Published

on

சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்திக்கை வைத்து தமிழில் தனது முதல் படத்தை எடுத்து சிறுத்தை சிவா என்றே தனது பெயர் மாறும்படி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சிவா, அடுத்ததாக தல அஜித்துடன் இணைந்து தொடர்ந்து 4 படங்களை இயக்கினார்.

இதில், வீரம் மற்றும் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியை அஜித் – சிவா கூட்டணிக்கு தந்தது. வேதாளம் ஓரளவுக்கு ஹிட் ஆனது. விவேகம் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், சூர்யாவுடன் சிவா இணைய உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் என்.ஜி.கே அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படமும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள, இந்தியாவின் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர். கோபிநாத்தின் பயோபிக் படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது.

சுதா கொங்கராவின் படத்தை முடித்து விட்டோ அல்லது அதனுடன் இணைந்தோ சிவா இயக்கத்தில் சூர்யா கைகோர்க்க உள்ளதாகவும் அதனை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

Trending

Exit mobile version