கிரிக்கெட்

INDvENG – சர்ச்சையான சூர்யகுமாரின் கேட்ச்- 3வது அம்பயர் தூங்கிவிட்டாரா..?- நெட்டிசன்ஸ் குமுறல்

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்றைய 4வது டி20 போட்டியில் இந்தியா, 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்று சமநிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ், 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். அதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியாவுக்காக சர்வதேச களத்தில் முதல்முறையாக பேட் செய்த சூர்யகுமார் அதிரடி அரை சதம் அடித்து, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆனால் அவர் நேற்று அவுட்டான முறை மிகவும் சர்ச்சையாக மாறி வருகிறது. நேற்று ஆட்டத்தின் 14வது ஓவரை சாம் கரன் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை பைன் லெக் திசையில் ரேம்ப் ஆட முயல, அவர் அடித்த பந்து பீல்டர் டேவிட் மாலனின் கைகளில் தஞ்சம் அடைந்தது. ரீப்ளேயில் பார்க்கப்பட்டபோது பந்து தரையில் பட்டது துல்லியமாக தெரியும். ஆனால், மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்து சூர்யகுமாரை வெளியேற்றினார்.

சம்பவம் நடந்தபோது, பவுண்டரி லைனுக்கு அருகே இருந்த டக்கவுட்டில் அமர்ந்திருந்த கேப்டன் கோலி அதை பார்த்ததும் எழுந்து நின்று அம்பயரை நோக்கி கையை காட்டியபடி ‘அது அவுட் இல்லை’ என தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்திய அணியின் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

நெட்டிசன்களின் குமுறல்கள் இதோ:

seithichurul

Trending

Exit mobile version