தமிழ்நாடு

நீட் தேர்வு குறித்து பொதுவிவாதத்திற்கு தயாரா? சூர்யாவுக்கு பாஜக கேள்வி

Published

on

நீட் தேர்வு குறித்து பொதுவிவாதத்திற்கு தயாரா? என நடிகர் சூர்யாவுக்கு பாஜக கேள்வி
எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நீட் தேர்வு உள்பட பல மத்திய அரசின் திட்டங்களுக்கு நடிகர் சூர்யா தொடர்ச்சியாக தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக நீட்தேர்வு, புதிய கல்வி கொள்கை திட்டம், திரைப்பட ஒளிப்பதிவு சீர்திருத்தச் சட்டம் ஆகியவைகளுக்கு நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதுகுறித்த அவரது ஒவ்வொரு அறிக்கையும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து பொது விவாதம் நடத்த நடிகர் சூர்யா தயாரா என பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சவாலை சூர்யா ஏற்று கரு நாகராஜன் உடன் பொது விவாதம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

இந்த நிலையில் நீட் தேர்வை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அந்த கட்சிகள் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் மட்டுமே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நீட் தேர்வு எதிர்த்து வருவதாகவும் நீட் தேர்வில் உண்மையில் இரட்டைவேடம் போடுவது காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தான் என்றும் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்

மேலும் நீட் தேர்வில் தாக்கம் குறித்து ஆராயும் அரசாணைக்கு எதிராக பாஜகவின் வழக்கு சட்டபூர்வமான போராட்டம் என்றும் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்

Trending

Exit mobile version