சினிமா செய்திகள்
தனக்குத்தானே ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுத்து கொண்ட சூர்யா: ரஜினி ரசிகர்கள் கண்டனம்!
நடிகர் சூர்யா இதுவரை தனது படங்களில் எந்த விதமான அடைமொழியையும் போடாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அடைமொழியை போட்டிருப்பது ரசிகர்கள் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஞாபகம் வருவது ரஜினிகாந்த் என்பது தெரிந்ததே. அதனால் தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு யாரும் தமிழகத்தில் உள்ள திரை நட்சத்திரங்கள் உரிமை கொண்டாடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மலையாள சூப்பர் ஸ்டார், தெலுங்கு சூப்பர் ஸ்டார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று வேண்டுமானால் அண்டை மாநிலங்களில் உள்ளவர்கள் போட்டுக் கொள்வார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் திடீரென சூர்யா நடித்து முடித்துள்ள ஜெய்பீம் என்ற படத்தின் புரமோஷன் பணிக்கு சூப்பர் ஸ்டார் சூர்யா என பதிவு செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் சூர்யாவின் சொந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் சூர்யாவின் அனுமதியுடன் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தனக்குத்தானே போட்டுக்கொண்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு முதலில் அவர் தகுதி தானா என்பதை தன் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ரஜினி ரசிகர்கள் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜெய்பீம் படத்தின் டைட்டிலில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வந்தால் போர்க்கொடி தூக்குவோம் என்றும் ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.