சினிமா செய்திகள்

புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதா: மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் சூர்யாவின் அதிரடி டுவிட்!

Published

on

கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசுக்கு எதிராக சூர்யா அவ்வப்போது தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே. புதிய கல்வி கொள்கை உள்பட பல மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக அவர் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் மத்திய அரசின் திட்டம் ஒன்றை விமர்சனம் செய்து பதிவு செய்துள்ளார்.

மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு மாநிலங்களவையில் புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதா ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய மசோதாவின்படி திரைப்படங்கள் ஒருமுறை தணிக்கை செய்தால் மீண்டும் தணிக்கை செய்ய கோரிக்கை விட முடியும். அது மட்டுமின்றி திரைப்பட திருட்டுக்கள் உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருத்த மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பதற்காக மத்திய அரசு ஜூலை 2-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சட்டம் திருத்தம் குறித்து முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும் ஒருசிலர் இது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் சட்டம் என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக என்றும் அதன் குரல்வளையை நெறிப்பது அல்ல’ என்றும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version