சினிமா செய்திகள்

சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் அவருடைய 40வது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள வெப்சீரிஸ் ஒன்றின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக ஒன்பது இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகிவரும் வெப்சீரிஸ் ’நவரசா’. இந்த வெப்சீரிஸை ரதீந்திரன் பிரசாத், அரவிந்தசாமி, விஜய் நம்பியார், கௌதம்மேனன், பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் வசந்த் ஆகிய ஒன்பது இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.

இதில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய பகுதியில் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் சித்தார்த், அரவிந்த் சாமி இயக்கத்தில் ஸ்ரீராம், பிஜாய் நம்பியார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஹலிதா ஷமீம் இயக்கத்தில் யோகி பாபு, பிரியதர்ஷன் இயக்கத்தில் விக்ராந்த், கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா மற்றும் வசந்த் இயக்கத்தில் அதிதிபாலன் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வெப்சீரீஸ் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த வெப்சீரிஸ் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடிப்பில் வெளியாகும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வெப்சீரிஸில் சூர்யா, ரேவதி , சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், அரவிந்த்சாமி, பாபிசிம்ஹா, கௌதம் கார்த்திக், ரோபோ சங்கர், ரித்விகா, அசோக் செல்வன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/LetsOTT/status/1412011066637185036

seithichurul

Trending

Exit mobile version