சினிமா செய்திகள்
சூர்யா-வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ டைட்டில்லுக்!
பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில்லுக் இன்று மாலை வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து சூர்யா ரசிகர்கள் இந்த படத்தின் டைட்டில் லுக்கை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சற்றுமுன் ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. கருப்பு வெள்ளைய்யில் அட்டகாசமாக இருக்கும் இந்த டைட்டில் லுக்கை பார்த்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
பழைய உடைந்துபோன நாணயம் ஒன்றில் ஜல்லிக்கட்டு காளை உருவம் பதிக்கப்பட்ட இருப்பது போன்று இருக்கும் இந்த டைட்டில் லுக் சூர்யா ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு பிரியர்களையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ் அவர்கள் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடிக்க இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன் #VaadiVaasalTitleLook @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal pic.twitter.com/R6HXjYxvL2
— Kalaippuli S Thanu (@theVcreations) July 16, 2021