சினிமா

சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைவிமர்சனம்: இப்படி கூட படம் எடுக்க முடியுமா?

Published

on

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு ஏற்கனவே பத்திரிகையாளர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் நேற்று வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும், இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா என ஆச்சரியத்தில் மூழ்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜ்கண்ணு என்பவர் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் திருடி விட்டதாக பொய்யாக வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவருடைய மனைவி செங்கனி பழங்குடி மக்களுக்காக வாதாடி பொது சேவை செய்யும் வழக்கறிஞர் சந்துருவிடம் உதவி கேட்கிறார். இதனை அடுத்து களத்தில் இறங்கும் சூர்யா, ராஜ்கண்ணுவை மீட்டு தரும்படி நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்கிறார். இந்த மனு அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் காவல்துறையினருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது

கடந்த 1995ஆம் ஆண்டில் நடைபெறுவதாக கூறப்படும் இந்த கதையில் சந்துரு என்ற வழக்கறிஞர் கேரக்டரில் சூர்யா நடித்துள்ளார். மிகவும் தைரியமான அதேநேரத்தில் பழங்குடியின மக்களுக்கு உதவும் வகையிலான இந்த கேரக்டர் வீரம் மற்றும் அன்பு பாசம் ஆகியவை கலந்த ஒரு கலவையாக உள்ளது. குறிப்பாக நீதிமன்ற காட்சிகளில் அவர் மிகவும் சிறப்பாக சட்ட நுணுக்கங்களை வைத்து வாதாடும் எதிர்த்தரப்பு வழக்கறிஞரை திணறடிப்பது போன்ற காட்சிகள் இயக்குனரின் புத்திசாலித்தனமான திரைக்கதைக்கு சான்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யாவுக்கு இணையாக இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நட்சத்திரங்களும் நடித்து உள்ளனர் என்பதும் குறிப்பாக பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோமோல், ரஜிஷா விஜயன், குரு சோமசுந்தரம் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சுஜாதா நடித்த ’விதி’ படத்திற்கு பின்னர் நீண்ட நீதிமன்ற காட்சிகள் இருந்தாலும் ஒரு காட்சியில் கூட சலிப்பு தட்டவில்லை என்பதும் ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் திரைக்கதை காரணமாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படம் போனதே தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

சூர்யாவின் அபாரமான நடிப்பு, இயக்குனர் ஞானவேலின் அசாத்தியமான திரைக்கதை மற்றும் சீன் ரோல்டன் இசை ஆகியவை இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் சினிமாவில் அத்தி பூத்தார் போல இது போன்ற சிறப்பான படங்கள் வெளி வருவதை ரசிகர்கள் ஆதரித்தால் தான் மேலும் இது போன்ற நல்ல தரமான திரைப்படங்கள் வெளிவரும் என்பதால் இந்த படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது ஒரு கடமையாகவே கருதப்படுகிறது.

ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஒரு ஜெய் போடலாம்

seithichurul

Trending

Exit mobile version