சினிமா செய்திகள்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நிறைவு கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.

இந்த நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீஸர் பிப்ரவரி 18-ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.

மேலும் இது குறித்த அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டின் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படங்களில் ஒன்றாகும்.

seithichurul

Trending

Exit mobile version