சினிமா செய்திகள்

சூர்யா ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட் ரெடி!

Published

on

சூர்யா படத்தின் அறிவிப்பு என்றவுடன் என்ஜிகே அறிவிப்பு என்று ஏமாற வேண்டாம். இது, சூர்யா 37 படத்தின் அறிவிப்பு.

அயன், மாற்றான், படங்களை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 37 திரைப்படப் பெயரை அதிகாரப்பூர்வமாக வரும் ஆங்கில புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக இயக்குநர் கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மீட்பான், காப்பான், உயிர்கா என 3 தலைப்புகளை ட்விட்டர் போலில் கொடுத்து, ரசிகர்களை தேர்வு செய்ய நேற்று கே.வி. ஆனந்த் கூறினார்.

இதில், உயிர்கா என்பது உயிர்காப்பான் என்ற பொருளில் வருவது மட்டுமின்றி வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் அதனை தேர்வு செய்தனர்.

இந்நிலையில், சூர்யா 37 படத்தின் தலைப்பு வரும் ஜனவரி 1ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கே.வி. ஆனந்த் அறிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version