சினிமா செய்திகள்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தன்’ அட்டகாசமான டீசர்

Published

on

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த டீசரில் சூர்யாவின் அட்டகாசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக சூர்யாவின் ஆக்சன் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இறுதியில் சூர்யா பேசும் பஞ்ச் வசனமும் சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இந்த டீசர் சூர்யாவின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது மட்டுமின்றி இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version