சினிமா செய்திகள்
பாலா இயக்கத்தில் சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு!
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஏற்கனவே நடிகர் சூர்யா ’நந்தா’ மற்றும் ’பிதாமகன்’ ஆகிய படங்களில் நடித்து உள்ளார் என்றும் இந்த இரண்டு படங்களும் சூர்யாவுக்கு மிகப்பெரிய அளவில் பெயர் பெற்று தந்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது
இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவராததால் சூர்யா மற்றும் பாலாவின் ரசிகர்கள் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யா இந்த படத்தை உறுதி செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
”என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்”
இந்த டுவிட்டில் இருந்து பாலா-சூர்யா படம் உறுதி செய்யப்பட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்… pic.twitter.com/H9wyutZD3h— Suriya Sivakumar (@Suriya_offl) October 28, 2021