சினிமா செய்திகள்
சூர்யா-வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ டைட்டில்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷின் இசை அமைப்பில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’,
இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகி விட்டாலும் சூர்யா, வெற்றிமாறன் ஆகிய இருவருமே வெவ்வேறு படங்களில் கமிட்டாகி இருந்ததால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. மேலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களாலும் தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் சற்று முன்னர் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில்லுக் போஸ்டர் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் உற்சாகமாக சமூக வலைதளங்களில் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஜல்லிகட்டை மையமாக வைத்து கதையம்சம் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின் சில காட்சிகளும் இந்த படத்தில் இணைக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
மேலும் ‘வாடிவாசல்’ படத்திற்காக கடந்த சில மாதங்களாக சூர்யா தயாராகி வருகிறார் என்பதும் ஜல்லிக்கட்டுக்கான பயிற்சிகளையும் அவர் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
— G.V.Prakash Kumar (@gvprakash) July 15, 2021
வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30'க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். #VaadiVaasalTitleLookTomorrow @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal pic.twitter.com/PCJj6fJaVA
— Kalaippuli S Thanu (@theVcreations) July 15, 2021