சினிமா செய்திகள்

’தேவர் மகன் 2’ படத்தில் கமல்ஹாசனுடன் சூர்யா? பரபரப்பு தகவல்

Published

on

தேவர் மகன் 2 விரைவில் உருவாக்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படமான தேவர்மகன் 2 படத்தில் முக்கிய கேரக்டரில் சூர்யா நடிப்பதாக தெரிகிறது.

தேவர்மகன் முதல் பாகத்தில் கமல்ஹாசன் இளைஞராக இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவர் வயதானவராக இருப்பதாகவும் அவருடைய மகனாக சூர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஜோதிகா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த படம் குறித்த அறிவிப்பு விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆனவுடன் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த மன்மதன் அம்பு படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார் என்பது தெரிந்தது.

 

seithichurul

Trending

Exit mobile version