சினிமா செய்திகள்
’சூர்யா 40’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி-நேரம் அறிவிப்பு!
![surya 40 sword - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/surya-40-sword.jpg)
சூர்யா நடித்துவரும் 40வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது என்பதும் சூர்யா உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளின் போது ’சூர்யா 40’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வந்த நிலையில் தற்போது இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’சூர்யா 40’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூலை 23ஆம் தேதி சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் விருந்தாக அமையும் என்பது குறிப்பிடதக்கது.
சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்து உள்ளார் என்பதும் ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Suriya40FirstLook on July 22 @ 6 PM!#Suriya40 #Suriya40FLon22nd@Suriya_offl @pandiraj_dir @immancomposer @RathnaveluDop @priyankaamohan pic.twitter.com/ZzMNetQf8y
— Sun Pictures (@sunpictures) July 19, 2021