சினிமா
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ‘சர்வைவர்’ ஷோ – போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?….
16 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் 4 சீசன்கள் முடிந்து விரைவில் 5வது சீசன் துவங்கவுள்ளது. அதேபோல், ஆளே இல்லாத ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் 100 தங்கி அவர்களுக்கான டாஸ்கை முடிக்க வேண்டும் என்பது ‘சர்வைவர்’ நிகழ்ச்சி. யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு ஒரு பெரும் தொகை அளிக்கப்படும். வெளிநாட்டில் இது மிகவும் பிரபலம். தற்போது இந்த நிகழ்ச்சியும் தமிழுக்கு வரவுள்ளது.
தமிழில் ஜு தமிழ் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. பிக்பாஸை கமல் நடத்துவது போல ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் நடத்துகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டு விட்டனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு தனித்தீவில் இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில், பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதற்கட்ட போட்டியாளர்களின் பட்டியல் இதோ:
நடிகை விஜயலட்சுமி,
நடிகை விக்ராந்த்
நடிகர் நந்தா
நடிகர் பெசன்ட் ரவி
நடிகர் உமாபதி
நடிகை சிருஷ்டி டாங்கே
நடிகை காயத்ரி ரெட்டி
விஜே பார்வதி
ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. இந்நிகழ்ச்சி தொடர்பாக வெளியான புரமோ வீடியோ மூலம் இது உறுதியாகியுள்ளது. இன்னும் சில பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். விரைவில் அது வெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல் தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது.
The Big Promo of Survivor is Here. King-oda paarvaila Action Packed-ah iruka pothu. வேட்டையாட illa வேட்டையாக போறவங்க யாருனு Wait and Watch from 12 September, everyday 9.30 PM. #survivortamil #survivor #zeetamil @akarjunofficial pic.twitter.com/N7984eydzt
— Zee Tamil (@ZeeTamil) August 22, 2021