ஆரோக்கியம்

தினமும் 3 கப் காஃபி குடிப்பதால் நம்பமுடியாத நன்மைகள் – புதிய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்!

Published

on

அநேகர் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான காஃபியுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். இது அவர்களின் அன்றைய நாளை உற்சாகமாகத் தொடங்குவதில் உதவுகிறது. பொதுவாக, காஃபி விழிப்புணர்வையும், மனநிலையையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இப்போதுள்ள ஆய்வுகள் காஃபியின் ஆரோக்கிய நன்மைகளை வெளிச்சமிட்டுள்ளன.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், நாளொன்றுக்கு 3 கப் காஃபி பருகுவது சர்க்கரை நோய், இதய நோய்கள் உள்ளிட்ட அபாயங்களை 50% குறைக்கக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி & மெட்டபாலிசம் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

சுசோ பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி சார்ந்த சாஃபு கே கூறுகையில், 3 கப் காஃபி அல்லது 200-300 மி.கி காஃபின் எடுத்துக்கொள்வது, கார்டியோமெட்டபாலிக் நோய்களின் அபாயத்தை குறைக்கும் என்று தெரிவித்தார்.

காஃபி குடிப்பதன் நன்மைகள்:

  • காஃபி பாபுகளில் உள்ள பாலிஃபீனால்ஸ் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும்.
  • மூளை செயல்பாட்டை அதிகரிக்க காஃபி உதவுகிறது, நினைவாற்றலையும் தூண்டுகிறது.
  • மனச்சோர்வு மற்றும் அல்சைமர் போன்ற நரம்பியல் நோய்களின் அபாயத்தை குறைக்கும்.
  • இதயத்தை ஆரோக்கியமாக வைத்து, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களை தடுக்கும்.
  • மேலும், கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

காஃபி குடிக்க சிறந்த நேரம்:

காலை 8:00 – 9:00 மணி நேரம், கார்டிசோல் எனும் ஹார்மோன் உச்சத்தில் இருக்கும் நேரமாகும். எனவே, 9:30 – 11:30 மணி நேரத்தில் காஃபி பருகுவது சிறந்தது. இதேபோல், மதியம் அசதியாக இருந்தால் 1:00 – 3:00 மணி வரை காஃபி அருந்தலாம். ஆனால் மாலை 3 மணிக்குப் பிறகு காஃபி குடிப்பது இரவுக்கான தூக்கத்தை பாதிக்கக் கூடும்.

காஃபி சில நன்மைகளை வழங்கினாலும், அதை மிதமாக அருந்த வேண்டும். அதிக அளவில் காஃபி அருந்துவது பதட்டம், தூக்கமின்மை, மற்றும் இதய துடிப்பை அதிகரிக்கும்.

 

Poovizhi

Trending

Exit mobile version