சினிமா

சிம்பு ரசிகர்களுக்கு நள்ளிரவில் லைகா கொடுத்த சர்ப்ரைஸ்!

Published

on

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர் வரும் நவம்பர் 29ம் தேதி 2.0 படத்துடன் வெளியாகும் என லைகா அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு, திடீரென சிம்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த லைகா நிறுவனம் டீஸரின் ப்ரமோ என ஒரு சின்ன வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில், ஒருவரை அடித்து தள்ளும் சிம்பு, மாஸாக நடந்து வரும் காட்சி உள்ளது. இதனால், நேற்று இரவு முதல் தூங்காமல் சிம்பு ரசிகர்கள் ப்ரமோ வீடியோவை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கலுக்கு விஸ்வாசம் மற்றும் பேட்ட படத்திற்கு போட்டியாக வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version