சினிமா

அடுத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சூர்யாவின் 37வது படம் ரிலீஸ்

Published

on

சூர்யாவின் 37வது படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது. சூர்யா நடித்து வரும் என்ஜிகே படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக உள்ளது. ஆனால் இப்படப்பிடிப்பில் தாமதம் ஏற்படுவதின் காரணமாகத் தீபாவளி ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

என்ஜிகே படத்தின் நடித்து வருபவர்கள் சூர்யா, மோகன்லால், சயிஷா, ஆர்யா, போமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் ஒரு மாத காலம் நடைபெற்று வந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கியிருக்கிறது.

படப்பிடிப்புச் சென்னையில் முடிந்த பிறகு குலுமணாலி மற்றும் டெல்லியில் நடைபெற உள்ளது. இப்படம் அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version