சினிமா செய்திகள்

அடுத்தப் படத்தில் சூர்யா போடும் 5 கெட்டப்… அதில் ஒன்று ‘தமிழக முதலமைச்சர்’..!?

Published

on

நடிகர் சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் டைரக்டு செய்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு 5 கெட்டப்புகள் இருக்கும் என்றும், அதில் ஒரு கெட்டப் தமிழக முதலமைச்சர் என்றும் தகவல் பரவி வருகிறது.

சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனோடு நடித்த பிரியங்கா மோகன், இந்தப் படத்தில் நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் சூர்யாவின் 5 கெட்டப்புகளும், அதில் ஒன்று முதலமைச்சர் ரோல் என்றும் சொல்லப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சூர்யா, தொடர்ச்சியாக தன் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து வெளிப்படையாக சொல்லி வருபவர். குறிப்பாக சமீப காலமாக, மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் பல்வேறு விவகாரங்களில் எடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக, ‘புதிய கல்விக் கொள்கைக்கு’ எதிராக காட்டமான அறிக்கையை வெளியிட்டு மத்திய அரசுத் தரப்பைக் கண்டித்தார்.

பலரும் சூர்யா போகும் போக்கை வைத்துப் பார்த்தால், எப்படியும் அடுத்து அரசியல் என்ட்ரி தான் என்று கூறுகிறார்கள். இப்படியான சூழலில் சூர்யா, தன் அடுத்தப் படத்தில் தமிழக முதலமைச்சராக நடிக்க உள்ளதாக வெளியான தகவல், அவரது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் இயக்குநர் பாண்டிராஜ், இத்தகவலை மறுத்து, ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.

Trending

Exit mobile version